1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (12:53 IST)

தாயை இழந்த குட்டி காண்டாமிருகத்திற்கு பயிற்சி கொடுக்கும் வனத்துறையினர் !

கென்யாவில் தாயை இழந்து தவிக்கும்  காண்டாமிருகக் குட்டிக்கு, பூங்கா நிர்வாகிகள் சண்டையிட கற்றுத் தருகின்றனர்.


 
வேட்டையின்போது தாய் காண்டாமிருகம் கொல்லப்பட்ட நிலையில், குட்டியை மீட்ட கென்யா வனத்துறையினர் தனியாக வளர்த்து வருகின்றனர். 
 
இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள்  குட்டியை வனத்திற்குள் விட வேண்டும் என்பதால் மற்ற விலங்குகளோடு தற்காப்பு சண்டையிடுவதற்கு தற்போது பயிற்சி அளித்து வருகின்றனர்.
 
ஆனால் அந்த குட்டி காண்டாமிருகம் சண்டையிடத் தெரியாமல் துள்ளிக் குதித்து விளையாடுவது பார்வையாளர்களைக் வெகுவாக கவர்ந்துள்ளது.