1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2018 (16:02 IST)

39 மனைவிகள், 103 பிள்ளைகள், 232 பேரப்பிள்ளைகள்: வியக்க வைக்கும் தாத்தா...

கென்யாவில் வாழ்ந்து வரும் 68 வயதான நபர் ஒருவருக்கு 39 மனைவிகள், 103 பிள்ளைகள் மற்றும் 232 பேரப்பிள்ளைகள் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கென்யாவின் நண்டோலியா கிராமத்தை சேர்ந்தவர் நபி யோகனா. இவருக்கு 68 வயதாகிறது. இவருக்குதான் 39 மனைவிகள், 103 பிள்ளைகள் மற்றும் 232 பேரப்பிள்ளைகள் உள்ளனர். நபி தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என கூறி வருகிறார்.
 
இது குறித்து நபி பின்வருமாறு கூறியுள்ளார். நான் என் மனைவியை தேடி செல்லவதில்லை, கடவுள் எனது மனைவிகளை என்னிடம் அனுப்பி வைக்கிறார். கடவுளின் உத்தரவு படி நான் 48 திருமணங்கள் செய்துக்கொள்ள வேண்டும். அதை விரைவில் செய்து முடிப்பேன்.
 
மேலும், நான் 280 ஆண்டுகள் வாழ்வேன். இறந்த பின்னர், மீண்டும் மறுபிறவி எடுத்து அடுத்த 2700 ஆண்டுகள் வாழ்வேன் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சு வினோதமாக இருந்தாலும் அந்த கிராமத்து மக்கள் இவர் கூறுவதை நம்புவதாவே தெரிகிறது.