அதானி வழக்கு விசாரணையை வேகப்படுத்த வேண்டும்: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!
அதானி வழக்கை வேகப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 2020 முதல் 2024 வரை சூரிய மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் அதானி மற்றும் அவருடைய உறவினர்கள் என ஏழு பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகை சேர்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை ஒரே நீதிபதி கொண்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அதானி மீதான மூன்று வழக்குகள் வெவ்வேறு அமர்வில் விசாரிக்கப்படும் பட்சத்தில் காலதாமதம் ஏற்படும் என்பதால், , நீதித்துறை செயல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஒரே நீதிபதி தலைமையில் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அதானி மீதான வழக்குகளை மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராபிக்ஸ் என்பவர் விசாரிப்பார் என்றும் அனைத்து வழக்குகளும் தனித்தனியே விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran