மும்பை வெடிகுண்டு தாக்குதல்; தாவுத் இப்ராஹிம் கூட்டாளி கைது!
கடந்த 1993ம் ஆண்டில் மும்பை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய முக்கிய புள்ளி தற்போது சவுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1993ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 12 இடங்களில் குண்டுவெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 257 மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்புள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக இப்ராஹிம் தலைமறைவாக உள்ளார்.
தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளை இந்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது. இந்நிலையில் மும்பை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய இப்ராஹிமின் கூட்டாளி அபு பக்கர் என்பவரை அரபு அமீரகத்தில் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அபுபக்கர் அரபு நாடுகளில் இருந்து தங்கம், எலெக்ட்ரானிக் பொருட்களை இந்தியாவிற்கு கடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அபுபக்கர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.