1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Abortion delayed for corona virus panthemic,

கொரோனா பாதிப்பால் தடைபடும் கருத்தடைகள்: அதிர்ச்சித் தகவல்

கொரோனா
கொரோனா பாதிப்பால் தடைபடும் கருத்தடைகள்: அதிர்ச்சித் தகவல்
கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் கருத்தடை செய்ய வரும் பெண்களுக்கு உதவ முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கொரோனா பாதிப்பால் அவதியுறும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் தேவையில்லாத கர்ப்பத்தை கருத்தடை செய்ய விரும்பும் பெண்கள் கருத்தடை செய்ய முடியாத நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பிரிட்டனிலுள்ள அபார்சன் நெட்வொர்க் அமைப்பின் தலைவர் இதுகுறித்து கூறிய போது சரியாக வளர்ச்சி அடையாத சிசுவை சுமக்கும் தாய்மார்களுக்கு கொரோனா காலத்தில் கருத்தடை செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலை தொடர்ந்தால் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் இதனால் தேவையில்லாத கர்ப்பம் குழந்தையாக மாறும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
கொரோனா பெரும்பாலான நாடுகளில் கருத்தடை என்பது அதிக முக்கியத்துவம் இல்லாத மருத்துவ பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதால் கருத்தடை செய்ய வரும் பெண்களுக்கு வசதிகள் கிடைக்கவில்லை என்று தன்னார்வ நிறுவனம் ஒன்று கூறியுள்ளது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
பழனி தியேட்டர் அதிபரின் துப்பாக்கி சூடு: ஒருவர் பலியானதால் பரபரப்பு!