வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (13:56 IST)

மைதானத்தில் ரகளையில் ஈடுபட்ட டிவி நடிகை: போலீஸாரின் அதிரடி நடவடிக்கை!!!

தெலங்கானாவில் ஐபிஎல் போட்டியை காண சென்ற டிவி நடிகை மைதானத்தில் ரசிகர்களை மேட்ச் பார்க்க விடாமல் தொந்தரவு செய்துள்ளார்.
 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நேற்று ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
 
இந்த போட்டியை காண தெலுங்கு டிவி நடிகை பிரசாந்தி தனது தோழிகள் 5 பேருடன் மைதானத்திற்கு சென்றுள்ளார். ஆனால் பிரசாந்தி தனது தோழிகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிக்கொண்டும், சத்தம்போட்டுக்கொண்டும் சக பார்வையாளர்களை மேட்ச் பார்க்கவிடாமல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் கடுப்பான நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, போலீஸார் பிரசாந்தி உட்பட அவரது தோழிகள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்து வருகின்றனர்.