1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 ஜூலை 2018 (10:21 IST)

சிறையிலுருந்து ஹெலிகாப்டரில் தப்பிய கைதி

பாரிசில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கைதி ஹெலிகாப்டரில் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ரெடோயின் ஃபெய்ட்(46) என்ற திருடனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தது. 
 
சிறை தண்டனை பெற்று வந்த அவன் கடந்த 2013 ஆன் ஆண்டு சிறையில் இருந்து தப்பித்துச் சென்றான். பின் தலைமறைவாக இருந்த அவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில் சிறையில் இருந்த அவன் நேற்று 3 கைதிகள் துணையுடன் சிறையில் இருந்து தப்பிச் சென்றான். வெளியே இருந்த அவனது ஆட்கள் ரெடோயினை ஹெலிகாப்டரில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இச்சம்பவம் பாரிஸ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தப்பியோடிய கொள்ளையன் ரெடோயினை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.