1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (08:07 IST)

தூக்க கலக்கத்தில் ஸ்கூல் பேகுக்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற 4 வயது சிறுவன்

பிலிப்பைன்ஸில் சிறுவன் ஒருவன் தூக்க கலக்கத்தில் ஸ்கூல் பேகிற்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பிலிப்பைன்ஸில் உள்ள பள்ளியில் பள்ளி நேரம் நிறைவடைந்ததும் அனைத்து சிறுவர்களும் தங்கள் வகுப்பறையில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது 4 வயது சிறுவன் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான்.
 
ஆசிரியர் அந்த சிறுவனை எழுப்பி வீட்டிற்கு செல்லுமாறு கூறினர். சடாரென எழுந்த சிறுவன் தூக்கக்கலக்கத்தில் தனது ஸ்கூல் பேக்கை எடுப்பதற்கு பதிலாக அருகில் உள்ள நாற்காலியை தோள்களில் மாட்டிக்கொண்டு நடந்துசெல்கிறான். சிறுவனின் இந்த செயல் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.