வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

எந்த திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது...?

உறக்கம் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளின் முக்கியமான ஒன்று. ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்குவது மிகவும் நல்லது. அப்படி தூங்கும் போது எந்த திசையில் தலை வைக்க வேண்டும் ? எப்படி தூங்க வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளன.
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு மற்றும் அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் தலை வைத்து படுக்கவே கூடாது. இதற்கு அறிவியல் பூர்வமாகவும் சான்றுகள்  உள்ளன.வடக்கு திசையில் தலை வைத்து படுத்தால் வடக்கு திசையில் இருந்து வரும் காந்த சக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை  இழக்கும்.இதனால் இதய கோளாறுகள்,நரம்பு தளர்ச்சி உண்டாகும்.மூளை பாதிப்படையும்.
 
மல்லாந்து கால்களையும் கைகளையும் அகற்றி வைத்து கொண்டு தூங்க கூடாது. அப்படி தூங்கும் போது அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. எனவே குறட்டை உண்டாகும். குப்புற படுக்க கூடாது.
 
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் வைத்து தான் தூங்க வேண்டும். இடதுபுறமாக ஒரு கழுத்து வைத்து தூங்க வேண்டும். அப்படி தூங்கும் போது வலது மூக்கில் சுவாசம் சூரிய கலையில் ஓடும். இதில் 8 அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். மேலும் உடலுக்கு தேவையான வெப்ப காற்று அதிகரித்து பித்த நீர் அதிகம் ஆகி உணவு எளிதாக செரிமானம் அடையும். இதயத்திற்கு சீரான பிராண வாயு கிடைத்து இதயம்  பலப்படும்.
 
வலது புறம் படுப்பதால் இடது மூக்கு வழியாக சந்திர கலை சுவாசம் ஓடும். இதனால் 12 அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். சாப்பிட உணவு செரிமாணமாகாது.