1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஜூலை 2018 (10:53 IST)

நாய்க்கு சப்பாத்தி..எனக்கு பழைய சோறா - ஆத்திரத்தில் கொலை செய்த பிச்சைக்காரர்

மும்பையில் பிச்சைக்காரர் ஒருவர், தமக்கு பிச்சை போட்ட நபரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பொன்சாரி கிராமத்தை சேர்ந்த காவலாளியான சார்யு பிரசாத்(52) காவலாளியாக பணிபுரிந்து வந்தார். தன்குமார் என்ற பிச்சைக்காரன், சார்யுவிடம் சாப்பிட எதாவது பிச்சை போடும்படி கேட்டுள்ளார்.
 
இதனையடுத்து சார்யு, அந்த பிச்சைக்காரனுக்கு பழைய சோறு கொடுத்துள்ளார். பின் அருகிலிருந்த நாய்க்கு சப்பாத்தி போட்டுள்ளார். இதனைப்பார்த்த தன்குமார், கேவலம் நாய்க்கு இருக்கும் மரியாதை கூட நமக்கு இல்லை என நினைத்து கோபமடைந்து சார்யுவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தன்குமாரை தேடி வந்த போலீஸார், அவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.