வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (08:30 IST)

மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன்

ஐக்கிய அமீரகத்தில் கணவன் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அபுதாபியில் நபர் ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அந்த நபரின் மனைவி எதேர்ச்சையாக கணவரின் செல்போனை எடுத்து பார்த்த போது தனது அந்தரங்க புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 
அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே மற்றொரு அதிர்ச்சி, தனது அந்தரங்க புகைப்படங்களை கணவர் அவரது சகோதரருக்கு பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
 
இதனால் கடும் மன வேதனையடைந்த அந்த பெண், தன் கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அந்த கேடுகெட்ட கணவன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.