திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (19:38 IST)

ரூ.4.6 கோடி செலவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சிறுமி!

girl
சீன நடிகை போன்று தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, ரூ.4.6 கோடி செலவு செய்து 13 வயது சிறுமி ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்.
 
இந்த உலகில் பல மனிதர்கள் தாங்கள் அழகாக இருக்க வேண்டும், அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக பல அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்கின்றனர்.
 
இதையெல்லாம் நாம் செய்தியளின் மூலம் அறிந்துகொண்டு வருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதர் பல லட்சம் செலவழித்து  நாய் போன்று மாறினார். ஆனால், இந்த அறுவை சிகிச்சை செய்வது சில நேரங்களில் விபரீதமாவதும் உண்டு.

சமீபத்தில், திருமணத்தின்போது, சிரிக்கும்போது அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் மரணம் அடைந்தார். இதுபோன்ற சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
 
இந்த நிலையில், பிரபல சீன நடிகை எஸ்தர் யூ போல தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக ரூ.4.6 கோடி செலவு செய்து, 13 வயது சிறுமி ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்.
 
பள்ளியில் தன் தோற்றத்தை பலரும் கேலி செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், 13 வயதான சிறுமி செள சுனா,  ரு.4.6 கோடி செலவு செய்து, தன் முகத்தில் கண் இமை உள்ளிட்ட முக அமைப்பையே மாற்றியுள்ளார். 
 
இதன் மூலம் தனது  தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.