திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (08:06 IST)

‘துணிவு’ அஜித்குமாரின் வெறியாட்டம்! படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்!

இன்று நள்ளிரவு அஜித்குமாரின் ‘துணிவு’ படம் வெளியான நிலையில் படம் குறித்தும், அஜித்தின் நடிப்பு குறித்தும் பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகிறது.

நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த அஜித்குமாரின் ‘துணிவு’ படம் இன்று நள்ளிரவு 1 மணிக்கு ரிலீஸானது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் துணிவு படத்திற்கு பொங்கல் வரை டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்துள்ளன.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நீண்ட வருடங்கள் கழித்து அஜித்குமார் ஆண்ட்டி ஹீரோவாகவும், உணர்வு பூர்வமாகவும் தனது நடிப்பில் ரசிகர்களை மயங்க செய்துள்ளார். ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை விமர்சகர்களும் படத்தை மிகவும் புகழ்ந்து வருகின்றனர். கண்டிப்பாக இது துணிவு பொங்கல்தான் என்றும், அஜித்குமார் ஒற்றை ஆளாக மொத்த படத்தையும் மாஸ் படமாக்கிவிட்டார் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Edit by Prasanth.K