வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (13:46 IST)

பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீ வைப்பு.! வங்கதேசத்தில் போராட்டக்காரர்கள் அராஜகம்.!!

Mashrab Mortaza
வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரப் மோர்டாசாவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
வங்கதேச அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டம் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது. ஷேக் ஹசீனா வெளியேறிய சில மணி நேரங்களில் பிரதமர் இல்லத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் பேருந்துகள் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் கலவர பூமியாக மாறியது வங்கதேசம்.
 
இந்நிலையில் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரப் மோர்டாசாவின் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மஷ்ரப் மோர்டாசா வங்கதேசத்திற்காக  117 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் தனது நீண்ட கிரிக்கெட் வாழ்க்கையில் 36 டெஸ்ட், 220 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் 390 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி 2,955 ரன்களை எடுத்துள்ளார்.

 
விளையாட்டிலிருந்து விலகிய பிறகு, அவர் 2018-இல் ஹசீனா தலைமையிலான அவாமி லீக்கில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார்.  குல்னா பிரிவில் உள்ள நரைல்-2 தொகுதியில் இருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.