திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 ஜூன் 2018 (10:09 IST)

எல்லை தாண்டியதால் பசு மாட்டிற்கு மரண தண்டனை

ஐரோப்பிய எல்லையை தாண்டிச் சென்ற பசு மாட்டிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நகரமான பல்கேரிய எல்லைப் பகுதியில், இவான் ஹரலம்பியேவ் என்பவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார்.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவர் வளர்த்து வந்த கர்ப்பிணி பசு மாடு, எல்லையைத் தாண்டி செர்பியாவிற்குள் நுழைந்துவிட்டது.
 
ஐரோப்பியாவில் சட்டம் கடுமையானது என்பதால், எல்லை தாண்டிய குற்றத்திற்காக கர்ப்பிணி மாட்டிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
மனுஷனுக்கு தான் இது எல்லை, அது எல்லை என தெரியும். வாயில்லா அந்த ஜீவனுக்கு தெரியுமா இது தான் எல்லை என்று? என பலர் அந்த மாட்டிற்காக ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். மாட்டிற்கு தண்டனை விலக்கு கோரி பல சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.