செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (22:28 IST)

உடலுறவின் சாம்பியன்ஷிப் போட்டியா? ஸ்வீடன் அரசு விளக்கம்

love affair
பாலியல் உறவை விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக செய்திகளுக்கு ஸ்வீடன் விளையாட்டுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

ஸ்வீடன் நாட்டில் உடலுறவு ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாக ஒரு தகவல் வெளியானது.

அதன்படி, ஜூன் 8 ஆம் இப்போட்டி தொடங்கவுள்ளதாகவும், இப்போட்டியில் 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதற்கு சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகாத நிலையில், இது போலி செய்தி என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, ஸ்வீடன் அரசு கூறியுள்ளதாவது: ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பில் செக்ஸ் கூட்டமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஸ்வீடன் அரசு பாலியல் உறவை விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக வெளியான் செய்திகளுக்கு அந்த நாட்டு விளையாடுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.