வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (08:19 IST)

காதலி இறப்பதை பொறுமையாக வீடியோ எடுத்த கொடூர காதலன்

லண்டனில் காதலி இறப்பதை காதலன் பொறுமையாக வீடியோ எடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனை சேர்ந்தவர் ஜான் மிக்கி. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் ஃபேமசானவர். இவருடைய மகள் லூயில்லா. லூயில்லா போதை பழக்கத்திற்கு அடிமையானவர்.
 
இந்நிலையில் லூயில்லா கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகமான போதைப்பொருள் உட்கொண்டதால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அவருடன் அவரது காதலர் இருந்திருக்கிறார்.
 
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில் சமீபத்தில் லூயில்லாவின் காதலரிடம் விசாரித்தனர். அந்த நபரின் செல்போனை பரிசோதித்ததில், லூயில்லா இறப்பதற்கு சற்று முன்னர் அதிகமான போதைப் பொருளை உட்கொண்டு இருப்பதும், தம்மால் முடியவில்லை யாரையாவது உதவிக்கு கூப்பிடுங்கள் எனவும் தனது காதலனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் இதனை கேட்காமல் காதலி இறப்பதை பொறுமையாக வீடியோ எடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அவனை கைது செய்து அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.