ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (14:35 IST)

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடப்படுகிறதா?

earthquake
இந்திய பெருங்கடலில் இலங்கை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

இந்திய பெருங்கடலில் சற்றுமுன் 6.2 ரிக்டர் என்ற அலகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் நாட்டின் தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கு இந்திய பெருங்கடலில் 1326 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிக்டர் அளவில் 6.2 என இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  இருப்பினும் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடப்படவில்லை.

இந்த நிலநடுக்கம் இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் உள்ள பல்வேறு இடங்களில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Edited by Mahendran