1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 ஜூலை 2018 (12:06 IST)

எங்கே சென்றது மனிதம்? 6 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற 16 வயது சிறுவன்

ஸ்காட்லாந்தில் 6 வயது சிறுமியை 16 வயது சிறுவன் கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஸ்காட்லாந்தில் நடைபெற்றிருக்கும் சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது.
 
ஸ்காட்லாந்தில் அலேஷா மேக்பைல் என்ற 6 வயது சிறுமி தனது தந்தை, பாட்டி, தாத்தா ஆகியோருடன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் போலீஸார் சிறுமியை தேட ஆரம்பித்தனர். சிறுமி ஒரு காட்டுப்பகுதியில் சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். பின் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த கார் டயரின் தடயத்தை வைத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீஸார், இந்த நாச வேலையில் ஈடுபட்டது, சிறுமியின் வீட்டருகே இருந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவனை கைது செய்தனர். இந்த துயர சம்பவத்தால் சிறுமியின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.