1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (13:26 IST)

வெயிட்டை குறைக்க பட்டினி கிடந்தால் இதயத்திற்கு 91% ஆபத்து! – அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

Weight Loss
உடல் பருமனை குறைக்க பலர் தானாக சாப்பிடாமல் இருப்பது போன்ற செயல்களை செய்வதால் இதய நோய்களுக்கான ஆபத்து அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.



உலகம் முழுவதிலும் துரித உணவு கலாச்சாரம், மாறி வரும் வாழ்க்கை நிலை காரணமாக உடல் பருமன் அதிகரிக்கும் பிரச்சினை மக்களிடையே அதிகரித்து வருகிறது. உடல் பருமனை குறைக்க பலரும் பலவகையான டயட் முறைகளை பின்பற்றி வருகின்றனர். அப்படியாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருக்கும் டயட் முறைதான் Intermittent Fasting.

அதாவது ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 16 மணி நேரத்தை சாப்பிடாமல் பட்டினியாக கிடந்துவிட்டு 8 மணி நேரத்திற்கு மட்டுமே தினசரி சாப்பாடை சாப்பிடுவது. இவ்வாறான டயட் முறையால் உடல் பருமன் குறைவதாக பலரும் சொல்வதால் இதை பலரும் பின்பற்ற தொடங்கியுள்ள நிலையில் இந்த டயட் முறை குறித்து ஆய்வு செய்த தி அமெரிக்கன் இதய கூட்டமைப்பு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி இதுபோன்ற Intermittent Fasting முறையில் டயட் மேற்கொள்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 91% அதிகம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது இந்த டயட் முறையை மேற்கொள்பவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K