வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (20:57 IST)

அமெரிக்க இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் வெற்றி !

அமெரிக்க பாராளுமன்ற  இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5  பேர் வெற்றியடைந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

அந்த நாட்டின் பார்லிமெண்ட் இடைக்காலத் தேர்தல் நடைபெற்ற  நிலைய்ய்ல், மிசிகன் தொகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதனேதரும், சிலிகான் வேலியில் ரோகன்னாவும், கலிபோர்னியாவில் அமி பெரராவும், இல்லினாசில் ராஜா கிருஸ்ணமூர்த்தியும், வாஷிங்டன் மாகாணத்தில் பிரமீளா ஜெயபால் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஏற்கனவே, துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், சமீபத்தில், இந்த அரசில் இந்தியர்கள் முக்கிய பதவிகளில் அமரவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பாராளுமன்ற இடைக்காலத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தோர் வெற்றிபெற்றுள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Edited by Sinoj