வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (12:00 IST)

போரபோக்க பாத்தா தண்ணீரே கிடைக்காது... ஐ.நா வேதனை!

2050 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று எச்சரிக்கை. 
 
2021 ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு வருகிற 31 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு‘தண்ணீருக்கான பருவநிலை சேவைகள் நிலை 2021’என்கிற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் இருந்து 360 கோடி மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
உலகின் பருவநிலை அதிவேகமாக மாறி வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் புவி வெப்பமயமாதல் உண்டாகிறது. இந்த பருவ நிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. எனவே உலக நாடுகளின் தலைவர்கள் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக்கொண்டு பருவ நிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள் என தெரிகிறது.