திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (17:36 IST)

குழந்தை அழகாய் இருந்ததால், தந்தை செய்த கொடூர காரியம்!!

ஆஸ்திரேலியாவில் மூன்று வயது குழந்தையை தந்தையே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த ஹெர்பர்ட் அதிகமாக மது அருந்தும் பழக்கம் உடையவர். சம்பவம் நடந்த நாள் அன்று பகல் முழுவதும் குடித்துவிட்டு, கஞ்சா புகைத்துள்ளார். 
 
ஹெர்பர்டுக்கு 7 வயது மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். போதை அதிகமானதால், தனது இரண்டு குழந்தைகள் மீதும் ஹெர்பர்ட் பெட்ரோல் ஊற்றியுள்ளார். 
 
பின்னர் தனது 3 வயது குழந்தையின் மீது நெருப்பு வைத்து கொளுத்தியுள்ளார். குழந்தையின் முகம் மற்றும் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் டேனியல் என்பவர் குழந்தைகளை காப்பாற்றியுள்ளார்.
 
போதையில் பைத்தியம் போல் நடந்து கொண்டதாகவும், குழந்தை அழகாக இருந்ததால் கொளுத்தினேன், என் குழந்தையை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் கூறியிருக்கிறார் ஹெர்பர்ட்.