வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2017 (14:00 IST)

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் பலி

கடந்த வாரம் பாகிஸ்தான் நடந்ததிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தற்பொழுது இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் இறந்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் சார்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகி உள்ளனர்.