1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. India win 3rd T20 and series

இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை முழுதாக வென்ற இந்தியா

srilanka
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி-20 தொடரில் ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில் இன்று மும்பையில் 3வது டி-20 போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 135 ரன்கள் எடுத்தது

136 ரன்கள் என்ற இலக்கை இந்தியா எளிதில் எட்டிவிடும் என்றே கருதப்பட்டது. ஆனால் இலங்கை அணியின் சரியான பந்துவீச்சால் இந்தியா ரன் எடுக்க திணறியது. இருப்பினும் இந்திய அணி 19.2 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அடுத்த கட்டுரையில்
2019 உலகக்கோப்பையில் இவர்களது பெயர் இடம்பெருமா??