வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (18:39 IST)

''ஒரு கருப்பு உருவம் பின் தொடர்ந்தது..'' பள்ளி மாணவியின் திகிலூட்டும் வாக்குமூலம்!

abuse
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று அவர் இதற்காக காரணம் குறித்து வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் என்ற பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர்,  நேற்று விளையாட்டு நேரத்தில், பள்ளி முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

அவரை மீட்ட பள்ளி நிர்வாகம் மருத்துவமனையில் அனுமதித்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் இதுகுறித்து போலீஸார் இன்று விசாரித்தனர்.

அதில், ''தன்னை ஒரு கருப்பு உருவம் தொடர்ந்து வந்து, மாடியில் குதித்து விளையாட தன்னை கட்டாயப்படுத்தியதாக'' கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், மாணவிக்கு தக்க மன நல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj