செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2020 (16:35 IST)

ஐந்தில் ஒருவருக்கு கொரோனாவால் ஆபத்து – அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

உலகில் ஐந்தில் ஒரு நபருக்கு கொரோனாவால் மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை தொட்டுள்ளது. பலி எண்ணிக்கையோ 4.32 லட்சமாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் இறப்பவர்கள் பெரும்பாலும் வேறு சில நோய்களால் நாட்கணக்காக பாதித்தவர்களாக உள்ளனர்.

உலகில் ஐந்தில் ஒருவருக்கு இதுமாதிரியான உடல்நல பிரச்சனைகள் உள்ளன. அதில் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் ஆகியவை முன்னிலையில் உள்ளன. இவர்களைக் கொரோனா தாக்கும்போது அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ இதழான தி லான்செட்டில் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.