1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஜனவரி 2018 (14:34 IST)

பயணிகளின் உயிரை பறிக்கும் அரசு; விபத்தில் ஒருவர் பலி

விருதாச்சலம் அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்தார்.

 
போக்குவரத்து உழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு இயக்கப்படுகிறது. நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், அரசு தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்து இயக்கப்படுவது பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமம் என்று தெரிவித்து இருந்தார்.
 
 
ஆங்காங்கே பேருந்துகள் விபத்துள்ளாவது நடந்து வருகிறது. இந்நிலையில் விருதாச்சலம் அருகே அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுமி மற்றிம் சாமுவேல் என்பவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு அரசு பேருந்துகளை இயக்கி வரும் அரசு பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.