15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த 14 வயது சிறுவன்


sivalingam| Last Modified திங்கள், 3 ஏப்ரல் 2017 (22:49 IST)
உலகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து கொண்டே போவதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். அவர்களுடைய அச்சத்தை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவில் 15 வயது சிறுமி ஒருவரை 14 வயது சிறுவன் ஒருவன் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி அதை ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பும் செய்துள்ளான்.


 


அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 15 வயது சிறுமி தனியாக வீட்டில் இருந்தபோது அருகில் உள்ள வீட்டில் உள்ள 14 வயது சிறுவன், சிறுமியை பலாத்காரம் செய்து அதை தனது நண்பர்கள் காணும் வகையில் ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பும் செய்துள்ளான். இதுகுறித்து சிறுமி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவாளியான சிறுவன கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தபப்ட்டு வருகிறான்

இந்த சம்பவம் குறித்து சிகாகோ நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி கூறியபோது, 'பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு எட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும் ஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார் 40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள் தெரிவிக்கவில்லை” என்று கூறினர்.

இந்த சம்பவத்தை அடுத்து சிறுமியின் குடும்பத்தினர் அமெரிக்காவின் வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :