12 வயது சிறுமி மீது காம வேட்டை: இரண்டு நாட்கள் மாறி மாறி புத்த துறவி உட்பட பலரால் பலாத்காரம்


Caston| Last Modified சனி, 30 ஜூலை 2016 (16:02 IST)
இலங்கையில் 12 வயது சிறுமி ஒருவர் சிலரால் கடத்தப்பட்டு இரண்டு நாட்கள் மாறி மாறி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் புத்த துறவி ஒருவரும் உள்ளார் என்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
கடந்த 10-ஆம் தேதி 12 வயது சிறுமியை சிலர் கடத்தியுள்ளனர். அவர்கள் அந்த சிறுமியை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் வைத்து பலாத்காரம் செய்த அவர்கள் அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
 
அரை மயக்கத்தில் இருந்த அந்த சிறுமி அருகில் உள்ள ஒரு புத்த மடத்தில் உதவி கேட்டுள்ளார். சிறுமிக்கு உதவுவதாக மடத்துக்குள் கூட்டி சென்ற புத்த துறவி ஒருவரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை ஒரு பெண் உடபட 12 பேரை கைது செய்துள்ளனர். சிறுமியை பலாத்காரம் செய்த புத்த துறவி தலைமறைவாக உள்ளார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :