1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 4 அக்டோபர் 2023 (13:47 IST)

104 வயது மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து சாதனை

Dorothy
அமெரிக்காவைச் சேர்ந்த  104 வயது மூதாட்டி டோரோத்தி என்பவர் , ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளார்.

இந்த உலகில் இளைஞர் முதல் முதியோர் வரை பலரும்  சாதிக்க நினைக்கிறார்கள். ஆனால், எப்படியும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள், அதற்கான செயல்களில் ஈடுபட்டு, தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு தங்கள் துறையில் சாதிக்கிறார்கள்.

இந்த சாதனைக்கு வயது என்பது ஒரு தடையேயல்ல . இதற்கு உதாரணமாக நிறைய சாதனையாளர்கள் உலகில் உள்ளனர். இருந்தனர்.

இந்த நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் இலினொய்  மாநிலத்தில் உள்ள ஒரு  மாநகரம் சிகாகோ. இப்பகுதியைச் சேர்ந்த  104 வயது மூதாட்டி டோரோத்தி என்பவர், ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளார்.

மிக அதிக வயதில் ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கேகார்ட் (103) என்பவர் இந்த சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.