1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By papiksha
Last Updated : செவ்வாய், 24 மார்ச் 2020 (09:41 IST)

ஜூன் மாதம் வரை சீல் வைக்கப்படும் திரையரங்குகள் - அதிரடி அறிவிப்பு!

ஜூன் மாதம் வரை சீல் வைக்கப்படும் திரையரங்குகள் - அதிரடி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பலியாகி வரும் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே போகிறது. .உலகை ஆட்டி படைத்துவருகிறது கொரோனா வைரஸ் என்னும் கோவிட் 19 மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதனால் வணிக வளாகங்கள் , ஷாப்பிங் மால், கடற்கரை உள்ளிட்ட மக்கள் கூடும் அத்தனை பொது இடங்களையும் மூடி மக்களை வீட்டிற்குள் இருக்குமாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நோய் பரவுவதை தடுப்பதற்காக அடுத்த கட்ட முயற்சிகளாக பல்வேறு தடைகளை பிறப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது  அஸ்திரேலியா, நியூசீலாந்து மற்றும் பிஜி உள்ளிட்ட நாடுகளில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் வருகிற ஜூன் மாதம் வரை முடப்படும் என அதிரடியாக அறிவிக்கப்படுள்ளது. இதனால் அங்கு எந்த ஒரு திரைப்படமும் ஓடாது. மக்கள் நலன் கருதி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை அந்நாட்டு மக்கள் வரவேறுள்ளனர்.