காவலருக்கு கொரோனா: தமிழகத்தில் அதிகரிக்கும் பீதி!!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 23 மார்ச் 2020 (18:23 IST)
விருதுநகர் ஆயுதப்படை காவலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. 
 
நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரொனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகள் பல 144 தடை உத்தரவு விதித்திருந்த நிலையில் தமிழகத்திலும் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
 
நாளை மாலை 6 மணி முதல் அதிகாரப்பூர்வமாக வரும் இந்த உத்தரவு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈநிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 
 
ஆம், விருதுநகர் ஆயுதப்படை காவலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. பாதுகாப்பு பணிக்காக கடந்த வாரம் கோவை சென்றவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :