வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (11:24 IST)

தலைகீழா தொங்கிட்டுதான் படிக்கணும்..! – ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் ப்ரோமோஷனுக்கு செய்த வேலை!

Stranger Things
நெட்ப்ளிக்ஸில் பிரபலமான “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” தொடரின் நான்காவது சீசன் இன்று வெளியாகும் நிலையில் ட்விட்டரில் வித்தியாசமான ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரபலமான வெப் சிரிஸில் ஒன்று ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ். இதுவரை 3 சீசன்கள் வெளியாகியுள்ள இந்த தொடரின் நான்காவது சீசன் இன்று வெளியாகிறது. இந்த வெப் சிரிஸின் முந்தைய சீசன்கள் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் சமீபத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இன்று நான்காவது சீசன் வெளியாகும் நிலையில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் என்ற வார்த்தையை ட்விட்டரில் தலைகீழாக போட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அப்சைட் டவுன் எனப்படும் மிரரிங் தியரியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை என்பதால் இப்படி வித்தியாசமான ட்ரெண்டிங் ப்ரொமோசனில் நெட்ப்ளிக்ஸ் இறங்கியுள்ளது.