புதன், 6 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (11:31 IST)

வில்லனான பேட்மேன்.. தடுத்து வீழ்த்துவாரா தோர்? – தோர் லவ் அண்ட் தண்டர் ட்ரெய்லர்!

thor
பிரபல மார்வெல் சூப்பர்ஹீரோவான தோரின் அடுத்த படமான லவ் அண்ட் தண்டர் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஹீரோ படங்களாக எடுத்து தள்ளி உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்துள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ஸ்பைடர்மேன்; நோ வே ஹோம், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் அண்ட் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் போன்ற படங்கள் உலக அளவில் பெரும் வசூலை குவித்துள்ளன.

அந்த வரிசையில் அடுத்ததாக வெளியாக உள்ளது பிரபல சூப்பர்ஹீரோ தோரின் லவ் அண்ட் தண்டர். இந்த படத்தில் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் தோராக நடித்துள்ளார். பேட்மேன் படத்தில் ஹீரோவாக நடித்த கிறிஸ்டியன் பெல் இதில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. இந்த படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.