1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
  4. Shocking News: 'Vasool Raja MBBS' Actor Dies in Road Accident?

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ்
கமல்ஹாசன் நடித்த புகழ்பெற்ற திரைப்படமான 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படம் காமெடி அம்சத்துடன் கூடிய கதையுடன் மட்டுமல்ல, அனைத்து கதாபாத்திரங்களின் ஆக்கமும் ரசிகர்களுக்கு நன்கு ஞாபகத்தில் உள்ளது.
 
இந்தப் படத்தில் சுவாமிநாதன் எனும் கேரக்டரில் தோன்றிய ஒரு துணை நடிகர் குறித்து தற்போது பரவும் செய்தி, ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் கமல்ஹாசனின் அறை தோழனாக, மெடிக்கல் காலேஜில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார்.
 
சமீபத்தில், ரெடிட் தளத்தில் ஒரு பயனர், “இந்த நடிகர் இப்போது எங்கு இருக்கிறார்?” என கேள்வி எழுப்ப, ஒருவர் பதிலளிக்கையில், “இவர் என் சகோதரரின் நண்பர். அவருடைய பெயர் ரத்தின சபாபதி. இவர் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்” என தெரிவித்துள்ளார்.
 
இது பற்றி அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தும் தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், இந்த தகவல் ரசிகர்களிடையே துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பாலூட்டிய அன்னைக்கும்… பாட்டூட்டிய அன்னைக்கும் உடல்நலம் சரியில்லை- வைரமுத்து பதிவு!