1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (12:07 IST)

Avatar 2 glimpse video: மரண வெய்ட்டிங்கில் ரசிகர்கள்!!

அவதார் 2 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

 
உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. 24 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 284 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 
 
டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் உலகில் 160 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சினிமா ரசிகர்கள் பல வருடங்களாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படம் வசூலில் உலக சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதோடு அவதார் 2 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. லாஸ் வெகாஸில் நடைபெறும் Cinemacon2022 விழாவில் அவதார் 2 க்ளிம்ஸ் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அவதார் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 
 
மேலும், இந்த படத்தின் டிரைலர் வரும் மே மாதம் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தோடு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.