விநாயகர் நூற்றெட்டு நாமாவளி வழிபாடு

ganapati
Geetha Priya| Last Updated: வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (13:18 IST)
விநாயகனை, வேலனுக்கு மூத்தவனை, தும்பிக்கையானை தினந்தோறும் துதிப்போர் கீழ்க்கண்ட நூற்றியெட்டு போற்றிகளைப் படித்து வணங்க வேண்டும்.
1. ஓம் அத்தி முகனே போற்றி
2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி
3. ஓம் அம்மையே அப்பா போற்றி
4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி
5. ஓம் அமரர்கள் கோனே போற்றி
6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி
7. ஓம் அங்குச பாஸா போற்றி
8. ஓம் அரு உருவானாய் போற்றி
9. ஓம் அறுமுகன் அண்ணா போற்றி
10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி
11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி
12. ஓம் அவல், பொரி,அப்பம், அருந்துவோய் போற்றி
13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வோய் போற்றி
14. ஓம் ஆதி மூலமே போற்றி
15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி
16. ஓம் ஆரா அமுதா போற்றி
17. ஓம் இருள் தனைக் கடிவோய் போற்றி
18. ஓம் இடையூறு களைவோய் போற்றி
19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி
20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி
21. ஓம் ஈசனார் மகனே போற்றி
22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி
23. ஓம் உத்தமக் குணாளா போற்றி
24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
25. ஓம் உண்மை நெறியாளா போற்றி
ganapati
26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி
27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
28. ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
29. ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி
30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி
31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி
32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி
33. ஓம் எண்குண சீலா போற்றி
34. ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி
35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி
36. ஓம் ஏக நாயகனே போற்றி
37. ஓம் எழில் மிகு தேவே போற்றி
38. ஓம் ஒளவையார்க் கருள்வாய் போற்றி
39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி
40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி
41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி
42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி
43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி
44. ஓம் முழு முதற் பொருளே போற்றி
45. ஓம் ஒளி மிகு தேவே போற்றி
46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி
47. ஓம் கணத்து நாயகனே போற்றி
48. ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி
49. ஓம் கலைஞானக் குருவே போற்றி
50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி
 


இதில் மேலும் படிக்கவும் :