Daily Horoscope
✕

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு செய்ய...!

Updated: புதன், 6 ஜூன் 2018 (18:09 IST)
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் துருவல்  - அரை கப்
குழம்பு மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
கடுகு, உளுந்து - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
 
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மொச்சையை சிறிதளவு உப்பு, பச்சை மிளகாயுடன் சேர்த்து வேகவைத்துக்  கொள்ளவும்.
 
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும். தக்காளி நன்றாக குழைந்ததும் அதில் அரைத்த கலவையை போட்டு வதக்கவும். அடுத்து அதில்  வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். உப்பு சரிபார்த்து கொள்ளவும்.
 
குழம்பு கொதிக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும். குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் இறக்கவிடவும். சுவையான கிராமத்து பச்சை மொச்சை குழம்பு தயார்.

எல்லாம் காட்டு

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments