வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2015 (12:56 IST)

மழைக் காலத்திற்கேற்ற மிளகுக் குழம்பு

மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் ஆகியவற்றை விரட்ட, இந்த மிளகு குழம்பு மிகவும் ஏற்ற ஒன்றாகும்.


 

 
தேவையான பொருட்கள்:
 
புளி - 1 சிறிய எலுமிச்சம் ப்ழ அலவு
மிளகு - 1 ஸ்பூன்
வற்றல் மிளகாய் 3 அல்லது 4
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 துண்டு
உப்பு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
 
செய்முறை:
 
புளியைக் கரைத்து இரண்டு டம்ளர் அளவுக்கு புளிக் கரைசல் எடுத்து கொள்ளவும்.
 
கருவேப்பில்லை, துவரம் பருப்பு, பெருங்காயம், மிளகு, உளுத்தம் பருப்பு, வற்றல் மிளகாய் இவற்றை எண்ணெயில் வறுத்து கொள்ளவேண்டும். 
 
வறுத்து ஆற வைத்த பொருட்களை நன்கு அரைத்துகொண்டு, புளி தண்ணீரில் உப்பு  சேர்த்து அரைத்தபுளி சிறிது சுண்டும் வரைக் கொதிக்க விட்டு இறக்கிவைத்து, கடுகு தாளித்துக் கொட்டவும். சுவையான மிளகுக் குழம்பு தயார்.