சுலபமான முறையில் தக்காளி சாஸ் செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
தக்காளி - ஒரு கிலோ
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 3 பல்
பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
எலுமிச்சைப்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
 
தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நல்ல கெட்டியான தக்காளியாக வாங்கிக் கொள்ளவும். அப்போதுதான் சாஸ் கெட்டியாக நன்றாக இருக்கும். பூண்டு, இஞ்சியைத் தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். 
 
அடுப்பில் தக்காளி, மிளகாய் தூள், உப்பு, சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து அடுப்பை மூடி 2 விசில் சத்தம் வரை வேக  விடவும். வெந்தவுடன் அடுப்பை திறந்து தக்காளியை ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.
 
இதை ஒரு பெரிய கண் உள்ள வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தக்காளி விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீதமுள்ள சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கைவிடாமல் கிளறவும். 
 
சாஸை ஒரு தட்டில் சிறிது ஊற்றினால், அது ஒட்டாமல் கெட்டியாக இருக்க வேண்டும். அதாவது,  நீர்க்க இருக்கக் கூடாது. இதுவே பதம், இந்த பதம் வந்தவுடன் பிறகு அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி ஆறியவுடன் சுத்தமான கண்ணாடி ஜாடியில் ஊற்றி மூடிவைக்கவும். இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். மிகவும் சுவையான தக்காளி சாஸ் தயார்.

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments