Daily Horoscope
✕

சுவையான வெஜ் பாஸ்தா செய்ய...!

Updated: செவ்வாய், 13 நவம்பர் 2018 (16:16 IST)
பச்சை மிளகாய் - 4
தக்காளி சாறு - 4 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
செய்முறை:
 
முதலில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு, அதில் பாஸ்தாவை போட்டு, எண்ணெய் மற்றும் சிறிது உப்பை போட்டு, நன்கு கலக்கி, தட்டைப் போட்டு மூடி, சிறிது நேரம் வேக வைத்து, வெந்துள்ளதா என்று பார்த்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பிறகு குளிர்ந்த நீரால் ஒரு முறை அலசவும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் மற்றும்  குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கள் அனைத்தும் ஓரளவு வெந்ததும், அதில் சிறிது உப்பை போட்டு, சிறிது நேரம் வேக வைக்கவும். 
 
பின்னர் அதில் தக்காளி சாறு, கரம் மசாலா தூள், சீரகப் பொடி, மிளகாய் தூள், மாங்காய் பொடி, மிளகுத் தூள் மற்றும் சில்லி சாஸ் விட்டு நன்கு கிளறவும். அனைத்துப் பொருட்களும் நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் பாஸ்தாவை போட்டு, நன்கு 5 நிமிடம் கிளறி, பின் அதனை இறக்கவும். சுவையான ஈஸியான பாஸ்தா தயார். இதன்மேல் கொத்தமல்லி மற்றும் துருவிய சீஸ் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

எல்லாம் காட்டு

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments