சுவையான பக்கோடா குழம்பு செய்ய...!
தேவையான பொருள்கள்:
கடலை பருப்பு - கால் கிலோ
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறிய துண்டு
மஞ்சள் துர்ள் - 1 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 5
தனியாத் தூள் 1 ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
சோம்பு, சீரகம் - 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 4
கடுகு, உளுந்து - அரை ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - பொடித்தது - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
புதினா, கொத்த மல்லி - சிறிதளவு
செய்முறை:
கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம், சோம்பு இவற்றைச் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த பருப்பு விழுதைச் சிறுசிறு உருண்டைகளாகப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
இஞ்சி பூண்டை நசுக்கி வைத்து கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, இஞ்சி, நறுக்கிய தக்காளி இவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் பச்சை மிளகாய், கசகசா, முந்திரி, தேங்காய் இவற்றை அரைத்துச் சேர்த்து, தனியாப் பொடி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
பிறகு தேவையான உப்பு, சேர்த்து, பொரித்த உருண்டைகளையும் போட்டு கொதித்ததும் புதினா, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பக்கோடா குழம்பு தயார்.