வெங்காயத்தாள் கூட்டு செய்வது எவ்வாறு என்பதனை பார்ப்போம்!!

Sasikala|
தேவையான பொருட்கள்:
 
வெங்காயத்தாள் - ஒரு கட்டு
பாசிபருப்பு - கால் கப்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 
செய்முறை:
 
வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும். பாசிபருப்பை மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
 
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.
 
இரண்டும் ஒன்றோடொன்று கலந்து வருவரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கவும். சுலபமாக முறையில் செய்யக் கூடிய வெங்காயத்தாள் பாசி பருப்பு கூட்டு தயார்.


இதில் மேலும் படிக்கவும் :