கொழுப்பை கரைத்திடும் - கொள்ளு ரசம்

Sasikala| Last Updated: செவ்வாய், 5 ஜனவரி 2016 (18:05 IST)
தேவையான பொருட்கள்:
 
கொள்ளு - 50 கிராம் (வறுத்தது)
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - 3 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
வரமிளகாய் - 2
பூண்டு - 6 பல்
தாளிக்க - எண்ணை,கடுகு
மஞ்சள் தூள் - தேவைக்கு
கருவேப்பிலை,கொத்தமல்லி - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
 

 
செய்முறை: 
 
கொள்ளை சிவக்க 2 ஸ்பூன் அளவு எடுத்து வறுத்து கொள்ளவும். தவிர மீதியை வேக வைக்கவும்.
 
வாணலியில் துவரம் பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பெருங்காயம்,மிளகாய், கொள்ளு எல்லாம் வறுத்து பொடிக்கவும்.
 
புளியை நீர் விட்டு கரைத்து, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வறுத்து அரைத்த ரசப்பொடியை மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்க வைக்கவும். 
 
உப்பும்,வேகவைத்த கொள்ளை சேர்க்கவும். ரசப்பொடி காரம் பார்த்து உபயோகிக்கவும். கடுகு தாளித்து கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். 
 
மணமணக்கும் கொள்ளு ரசம் ரெடி. கொள்ளு ரசம் சளி, ஆஸ்துமா, கொழுப்பு உள்ளவர்களுக்கும், மழைக் காலத்துக்கும் ஏற்றது.
 
குறிப்பு:
 
கொள்ளை வேகவைத்தும் சேர்க்கலாம் அல்லது வேகவைத்த தண்ணீரும் சேர்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :