வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

கதம்ப சாதம்

கதம்ப சாதம்

தேவையான பொருட்கள்:
 
அரிசி - 1 கிலோ
துவரம் பருப்பு - 250 கிராம்
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
தக்காளி - 250 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
புளி - 50 கிராம்
காய்ந்த மிளகாய் 10 கிராம்
தனியா - 25 கிராம்
மிளகு - 10 கிராம்
சீரகம் - 10 கிராம்
பெருங்காயம் 5 கிராம்
தேங்காய் துருவியது - 150 கிராம்
காராமணி - 250 கிராம்
கேரட் - 200 கிராம்
பீன்ஸ் - 200 கிராம்
சேனைக்கிழங்கு - 250 கிராம்
கறிவேப்பிலை தேவையான அளவு


 
 
செய்முறை:
 
அரிசி, துவரம்பருப்பு, தக்காளி, பாதி அளவு வெங்காயம் இவற்றை  குக்கரில் போட்டு வேக வைக்கவும். காய்ந்த மிளக்காய், இவற்றை குக்கரில் போட்டு வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், முழுமல்லி, மிளகு, சீரகம், கடலைப்பருப்பு இவற்றை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
 
புளியை கரைத்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். 
 
மிச்சமுள்ள வெங்காயம் மற்றும் காய்கறிகளைபோட்டு வதக்கவும். பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், தேங்காய்ப்பவுடர் இவற்றையும் போட்டு வேகவிடவும்.
 
வெந்தது, ஏற்கனவே வெந்து எடுத்து வைத்துருக்கும் அரிசி, பருப்பு, கலவையில் போடவும். அதன் மீது தேவையான மாசாலாத்தூள் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி, கடைசியாக நெய் விடவும்.