எள் துவையல் செய்வது எப்படி.....?

Sasikala|
காலையில் ஒரு பிடி எள்ளை உண்பது உடல் பலமடையும் என பண்டைக் கால மருத்துவம் குறிப்பிடுகின்றது. எள் கண் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்கிற பழமொழி இன்னும் வழக்கத்தில் உள்ளது.
 
தேவையான பொருட்கள்:
 
கறுப்பு எள் - அரை கப்
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கீற்று
புளி - கோலி அளவு
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை: 
 
வெறும் வாணலியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும். உப்பு தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில்  தனித்தனியாக வறுத்து கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு, புளி சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். தெவைப்பட்டால் சிறிது எண்ணெய், கடுகு போட்டு தாளித்து கொள்ளலாம். எள்ளில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :