Daily Horoscope
✕

அட்டகாசமான சுவையில் பன்னீர் குருமா செய்ய...!

Updated: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (14:59 IST)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன் 
பட்டை - 2
கிராம்பு - 2 
பிரியாணி இலை - 1
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
துருவிய தேங்காய் - 1/2 கப் 
முந்திரி - 8 
கசகசா - 1/2 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5
செய்முறை:
 
வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். பன்னீரை பொடியான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
 
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீரை சேர்த்து பொன்னிமாக வதக்கிக் கொள்ளவும். மற்றொரு அகன்ற  வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
 
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 15 நிமிடம், எண்ணெய் தனியாக  பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
 
பின்னர் க்ரீம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்த பிறகு பன்னீர் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி 1 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து,  கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான பன்னீர் குருமா தயார்.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments