1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2015 (13:48 IST)

மழைக்காலத்துக்கு உகந்த தூதுவளை சூப்

மழைக்காலம் என்பதால் சளியால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.  இதனை தடுக்க தூதுவளை சூப் மிகவும் அருமையான ஒன்றாகும்.  முட்கள் அதிகம் இருக்கும், இதனை அகற்றி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

 
 
தூதுவளை அதிகப்படியான வெப்பத்தை நடுநிலைப்படுத்தும்.  தொண்டை புண், இருமல் மற்றும் சளியை அறவே ஒழிக்கும் ஆற்றல் கொண்டது.
 
தேவையான பொருட்கள்:
 
தூதுவளை இலைகள் - ஒரு கைப்பிடி
மிளகு  -1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
பூண்டு - 6 பல் பொடியாக
வெங்காயம் - 2 
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
தனியாத்தூள் -1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை -1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கான்ப்ளார் - அரை தேக்கரண்டி
 
செய்முறை:
 
ஒரு கடாயில் மிளகு, சீரகம் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
 
வெண்ணெய் அல்லது எண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு ஊற்றி அதில் பூண்டு, வெங்காயம் பொடியாக சேர்த்து வதக்கி பிறகு தூதுவளையை சேர்த்து வதக்கி துண்டு துண்டாக அல்லது (பேஸ்ட் போல செய்தும் சேர்க்கலாம்) மிளகு, சீரகம்  பொடிகளை சேர்த்து தனியாத்தூள், உப்பு போடவும்.
 
பிறகு தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவேண்டும் 
 
நன்கு கொதித்து வந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் கான்ப்ளார் கரைத்து ஊற்றி இறக்கி மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.
 
ஆரோக்கியமான மருத்துவ சூப் தயாராக உள்ளது.