பாசிப்பருப்பு வெஜ் ஊத்தப்பம்

sasikala| Last Modified வெள்ளி, 7 ஆகஸ்ட் 2015 (15:14 IST)
தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு - அரை கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், ஏதேனும் ஒரு கீரை (நறுக்கியது) - அரை கப், பச்சைமிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

பிறகு நறுக்கிய வெங்காயம், கீரை சேர்த்து வதக்கி, கொஞ்சம் உப்பு போட்டுக் கிளறவும். நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, கோதுமை மாவு, கடலை மாவை சேர்த்துக்கிளறி இதனுடன் வதக்கி வைத்த வெஜிடபிள் கலவையை சேர்த்துக் கலக்கவும். பிறகு, உப்பு சரிபார்த்து தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை கரண்டியால் எடுத்து சற்றே மெல்லிய ஊத்தப்பங்களாக ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :